Tuesday, 11 June 2019

திரைக்கதை எழுதுவது எப்படி ? பாகம் 1

திரைக்கதை  என்றால் என்ன?
     
                                                                           திரைக்கதை (Screenplayதிரைப்படம்தொலைக்காட்சி படங்களுக்காக எழுதப்படும் எழுத்துக் கோர்வை. திரைக்கதை பல வடிவங்களைக் கொண்டது....  அதாவது நாம் நம் கதையை எப்படி திரையில் காட்டினால் நல்லா இருக்கும் என  இருக்கும் காட்சி அமைப்பு....

                                
                          "சிட் ஃபீல்டு" என்பவர் திரைக்கதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை உலகில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், இனி வெளியாகவுள்ள திரைப்படங்கள் ஆகியவை பெரும்பாலும் இவர் வகுத்துக் கொடுத்த ஆரம்பம் - நடு - முடிவு என்ற திரைக்கதை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு "மூன்று அங்க அமைப்பு" (Three Act Structure) என அழைக்கப்படுகிறது.


ஆரம்பம் : இந்த அங்கத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களையும், இந்த திரைப்படம் எதைப் பற்றியது என்பதையும் தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்தி விட வேண்டும்.

திருப்பம் : இந்த அங்கத்தில் கதையில் ஒரு திருப்பம் நிகழ்ந்து, அதன் மூலம் கதையின் முடிவை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க வேண்டும்.   

முடிவு : இந்த அங்கத்தில் கதையின் இறுதியில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று விவரித்து திரைக்கதையை முடிக்க வேண்டும்.  


 ஆனால்  இது போல் முண்று அங்குல அமைப்பு(three Act Structure)  இல்லாமல் திரைக்கதை அமைக்கலாம்...

உதாரணம்:
THREE ACT STRUCTURE :  செக்கச்சிவந்த வாணம்
OTHER                            மாநகரம்...




திரைக்கதை அமைப்பு (SCREEN PLAY STRUCTURE)
காட்சி தலைப்பு
(Scene  heading)

காட்சி தலைப்பு என்பது நாம் எழுதிய கதை அல்லது நாம் நினைத்த காட்சி எங்கே நடக்கிறது.. அதாவது  உப்புறம் அல்லது வெளிபுறம்.. (interior  or exterior)
என குறிப்பிட வேண்டும்.அதை தமிழில்  உள் புறம் அல்லது வெளிபுறம் என குறிப்பிட வேண்டும்.. அதுக்கு அடுத்து.. ஓரு புள்ளி வைத்து அந்த காட்ச்சி நடை பெறும் காலம் அதாவது.. காலை/மாலை/ இரவு என்பதை குறிப்பிட வேண்டும்.. இதை ஆங்கிலத்தில்.. DAY/NIGHT.  அதை தொடர்ந்து அந்த காட்சி நடை பெறும் இடம் குறிப்பிட வேண்டும் உதாரனமாக, பள்ளி, காலேஜ், பேருந்து.....

For example;
in English   :    INT. SSSN Govt.Hr.Sec.School, DAY
தமிழ்           உள்புறம். ச.சீ..ச.நா.அரசு மேல்னிலைபள்ளி. பகல்





செயல்
(Action)

Action  செயல்:    இதில் என்ன நடக்கிறது ?
 யார் இத செய்ற?     எண்பதை தெளிவாக விரிவாக கூற  வேண்டும்.
அதாவது.. நம் கதையை படத்தில் எப்படி காட்டவேண்டும் என்பதை ஓன்று விடாமல் கூற வேன்டும்.. 

For Example:
Int. SSSN.GOVT.Hr.Sec.School. DAY
ஆணந்த் அந்த சைக்கிள் செட்டில் சைக்கிளை நிறுத்தி நடக்க தொடங்கினான். அங்கு தூரத்தில் ஓரு குறள் கேட்டது அதை கேட்டு படக்கென திரும்பி பார்க்கிறான். அவன் முகத்தில் பெரிய புண்ணகை வருகிறது.. ஓரு பென் சிரிப்புடன்  அவனை நடக்கிறான். அவன் கால்கள் வேகமாக நடக்கிறான்.  அவன் அருகே வந்ததும் அவனனை கட்டினைத்தான்.. கண்ரேம் வந்த துளியை துடைக்கிறான் ராஜ்.....



கதாபத்திரம்
character name

கதாபத்திரம் என்பது நாம் கதையில் வரும் நபர் அல்லது பொருட்களின் பேர்கள்.. அதை நாம் குறிப்பிட வேன்டும்.. அந்த கதாபத்திரம் பெயர்கள் எழுத வேண்டும்.. தேவையில்லாத காதபத்திரம் ஓரு வேளை உங்கள் காட்சியில் வந்தால் அதன் பெயரை எழத அவசியம் இல்லை.. அதாவது. வாட்ச்மேன், போலிஸ், இவர்கள் படத்தில் ஓரு காட்சியில் மட்டும் வந்தால் அவர்கள் பெயர் இடம் பெற அவசியம் இல்லை.. ஆங்கிலத்தில் எழுதும் போது பெயரை CAPITAL LATTER ல் எழுத வேன்டும்..

For Example
Int. SSSN.GOVT.Hr.Sec.School. DAY
ஆணந்த் அந்த சைக்கிள் செட்டில் சைக்கிளை நிறுத்தி நடக்க தொடங்கினான். அங்கு தூரத்தில் ஓரு குறள் கேட்டது அதை கேட்டு படக்கென திரும்பி பார்க்கிறான். அவன் முகத்தில் பெரிய புண்ணகை வருகிறது.. ஓரு பென் சிரிப்புடன்  அவனை நடக்கிறான். அவன் கால்கள் வேகமாக நடக்கிறான்.  அவன் அருகே வந்ததும் அவனனை கட்டினைத்தான்.. கண்ரேம் வந்த துளியை துடைக்கிறான் ராஜ்.....
                                                   
                                                        ஆணந்த்
                                உண்ன பாத்து ஓரு மாசம் ஆச்சி
                                                                ராஜ்
                          அப்பா, அம்மா சொந்த ஊருக்கு கூட்டிபோயிடாங்க
                                                              ஆனந்த்
                                             லீவு எப்படி போச்சி
                                                                ராஜ்
                                                  நீ இல்லாமா.. போர்டா